19/08/2026
கொன்னையூர் நினைவுத்தூண் கல்வெட்டுகள்!
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், கொன்னையூர் அருகிலுள்ள கொன்னைக் கண்மாயில் கண்டறியப்பட்ட 10 நினைவுத்தூண் கல்வெட்டுகள், சோழர் கால வரலாற்றில் குறிப்பிடத்தக்க தொல்லியல் சான்றுகளாகத் திகழ்கின்றன. அவற்றில் 9 கல்வெட்டுகள் வாசிக்கக்கூடிய நிலையில் உள்ளன. இவை ராஜேந்திர சோழன் முதல் குலோத்துங்க சோழன் வரையிலான காலத்தைச் சேர்ந்தவை.
இந்த நினைவுத்தூண்களில் #குன்றன்சாத்தன் என்ற பெயர் இருமுறை இடம்பெறுகிறது. அதோடு மருதன் செட்டி, ஞெட்டி, கங்கை கொண்ட சோழ செட்டி, முத்தங் கஞ்சாறன் எனும் மும்முடி சோழ சிதிலட்டி, சிறப்பன் உள்ளிட்ட பெயர்களும் காணப்படுகின்றன. “செட்டி”, “ஞெட்டி” போன்ற சொற்கள் வணிகத் தொடர்பைக் காட்டுவதோடு, ஒரு கல்வெட்டில் “படை” என்ற குறிப்பும் இடம்பெறுவதால், வணிகர்களுடன் வீரர்கள் அல்லது காவல் சார்ந்தவர்களும் இப்பகுதியில் செயல்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஆனால் “குன்றன் சாத்தன்” என்ற பெயர் நம்மைச் சுற்றியுள்ள மற்ற வரலாற்றுச் சான்றுகளையும் நினைவுபடுத்துகிறது.
கொன்னையூர் அருகிலுள்ள செம்பூதி என்ற ஊரின் பெயர், சாத்தன்பூதி என்ற முத்தரையர் மன்னரின் பெயருடன் தொடர்புடையதாக உள்ளூர் வரலாற்று ஆய்வுகளில் குறிப்பிடப்படுகிறது. சாத்தன் என்ற பெயரைக் கொண்ட முத்தரையர் ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய ஊர்ப்பெயர்கள், கோயில்கள், நீர்நிலைகள் மற்றும் கல்வெட்டுச் சான்றுகள் இப்பகுதியில் காணப்படுகின்றன.
அதேபோல், கொன்னையூர் அருகேயுள்ள ஆலவயல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாத்தன் காடு, சாத்தன் கண்மாய், சாத்தன்/சாத்தகருப்பன் போன்ற பெயர் வழக்குகளும் காணப்படுகின்றன.
மேலும், கொன்னையூர் கல்வெட்டுகளில் இவ்வூர் “கொன்றையூர்”, “உத்தமசோழபுரம்” என்ற பெயர்களிலும் குறிப்பிடப்பட்டிருப்பது இப்பகுதியின் தொன்மையை மேலும் வெளிப்படுத்துகிறது.
“குன்றன் சாத்தன்” என்ற பெயருக்கும், இப்பகுதியில் காணப்படும் சாத்தன் பெயருடைய பழைய மரபுச் சான்றுகளும் ஒரே நிலப்பரப்பில் தொடர்ந்து காணப்படும் சாத்தன் என்ற பெயர், பழமையான ஊர்ப்பெயர்கள், நீர்நிலைப் பெயர்கள், கோயில் மற்றும் கல்வெட்டு சான்றுகள் ஆகியவை இணைந்து பார்க்க வேண்டிய முக்கியமான வரலாற்றுத் தடயங்களாக உள்ளன.
நன்றி...
ஏஎஸ்.கலையரசன் அம்பலகாரர்
முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூடம்
#கொன்னையூர் #கல்வெட்டுகள் #நினைவுத்தூண்கள் #சோழர்வரலாறு #முத்தரையர்வரலாறு #குன்றன்சாத்தன் #செம்பூதி #பொன்னமராவதி #புதுக்கோட்டை #தமிழர்வரலாறு #வரலாற்றுஆய்வு