கள்ளர் போர்ப்படை

கள்ளர் போர்ப்படை வனத்தில் மேய்ந்தாலும் இனத்தால் ஒன்று சேர்வோம் ..💯
(1)

12/06/2026

பாரதிராஜா வின் இறுதி ஊர்வலத்தில் தாய்மாமன் சீர் ....!

தாய்மாமன் உறவு என்பது பிறப்பு முதல் இறப்பு வரை ....

#பாரதிராஜா #தாய்மாமன்

12/06/2026

பிரமலைக்கள்ளர் பழக்க வழக்கங்கள்
குடம் உடைக்கும் பெண்ணுக்கு பிறந்த வீட்டு சேலை போடும் முறை ...!!
#பாரதிராஜா

12/06/2026

இயக்குனர் இமயம் பாரதிராஜா விற்க்கு இறுதி அஞ்சலி செலுத்திய முருகன் ஜி ...

#பாரதிராஜா #முருகன்ஜி

12/06/2026

தாத்தா நம்மல எல்லாரையும் விட்டுட்டு போயிட்டாரு பாரதிராஜா வின் பேத்தி கண்ணீருடன்...🥹💔

12/06/2026

அரசு மரியாதையுடன் இயக்குநர் இமயம் பாரதிராஜா வின் இறுதி சடங்கு.....🙏

#பாரதிராஜா

 #பிறமலைக்கள்ளர்களும் 1000 வருடம் பாரம்பரிய நாட்டமைப்பும்...!-----------------------------------------------------------...
12/06/2026

#பிறமலைக்கள்ளர்களும் 1000 வருடம் பாரம்பரிய நாட்டமைப்பும்...!
-----------------------------------------------------------------------
8 நாடுகளும் அதனை உள்ளடக்கிய 24 உபகிராமங்கள் என்ற மிகப்பெரிய நிலப்பரப்பில் பிறமலைக்கள்ளர் நாடுகளாக வரையறை செய்யப்படுகிறது.

* திடியன்
* வாலாந்தூர்
* புத்தூர்
* கருமாத்தூர்
* பாப்பாப்பட்டி
* கொக்குளம்
* வேப்பனூத்து
* தும்மக்குண்டு போன்றவை.

ஆனால் இவை நாயக்கர் காலத்தில் தான் உருவானது என்று பல ஆய்வாளர்கள் சொல்லி வந்தனர். தற்போதைய பல தரவுகள் அத்தகைய கருத்துக்களை உடைத்துள்ளது.

மதுரையில் மேல்நாடு (மேற்கு நாடு) என்று அழைக்கப்படும் பிறமலைக்கள்ளர் நாடு தொல்லியல் தரவுகள் படி 1000 வருடங்களுக்கு மேல் பழமை என்பதற்கான சான்றுகள் உள்ளது. (கல்வெட்டு, செப்பேடு தரவுகள் படி)

கிபி 10ம் நூற்றாண்டுகளில் தொடக்கத்தில் வாழ்ந்த சோழன் தலை கொண்ட வீரபாண்டியன் காலத்தில் #தென்கல்லக_நாடு என்கிற பெயரில் ஆணையூர் கல்வெட்டு குறிக்கப்பட்டுள்ளது.

கிபி 10ம் நூற்றாண்டில் இறுதியில் இராஜராஜ சோழன் பாண்டிய நாட்டை முழுமையாக தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். அப்போது தென்கல்லக நாட்டில் பல்வேறு தானங்களை செய்துள்ளார்.

கிபி 11ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆட்சிக்கு வந்த இராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டிலும் தென்கல்லக நாடு பற்றி குறிப்பு உள்ளது.

இராஜேந்திர சோழன் ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளில் தனது மகனான சுந்தர சோழனுக்கு பாண்டியன் என்ற பட்டத்தை சூட்டி மதுரையின் ஆட்சியாளராக அமர்த்தினார். அப்போதும் சுந்தர சோழ பாண்டியன் என்கிற பெயரில் தென்கல்லக நாட்டு ஆணையூரில் (திருக்குறுமுள்ளூர்) கல்வெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது.

பாண்டியர் மற்றும் சோழர் காலங்களில் பிறமலைக்கள்ளர் நாடுகள் தென்கல்லக நாடு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது மட்டும் அல்லாமல் அது தமிழ் அரசர்களின் படைத்தளங்களாகவும் செயல்பட்டு வந்துள்ளது.

கிபி 13ம் நூற்றாண்டுக்கு பின்பு முஸ்லிம் படைகளிடம் பாண்டியர் பேரரசு வீழ்ச்சி அடைந்து மதுரையே விட்ட வெளியேறினார்கள். அதன் பிறகு முஸ்லிம் படையே வீழ்த்தி விஜயநகர பேரரசு மதுரையே கைப்பற்றியது. விஜயநகர பேரரசுக்கு கீழ்படிந்து வாணாதிராயர்கள் என்பவர்கள் மதுரையில் ஆட்சி செய்கிறார்கள். அப்போது வாணாதிராயர்களின் செயல்பாடுகள் தென்கல்லக நாடு (பிறமலைக்கள்ளர் நாடு) பகுதியில் அதிகமாக இருந்துள்ளது. அதன் காரணம் பாண்டியர் படைகளாக செயல்பட்ட கள்ளர் நாடுகளை கட்டுப்படுத்துவதற்காக வாணாதிராயர்களை விஜயநகர பேரரசு அமர்த்துகிறது.

கிபி 1453ம் வருடம் ஆட்சியில் இருந்த உறங்கா வில்லிதாசன் மகாபலி வாணாதிராயர் என்பவன் ஶ்ரீவில்லிப்புத்தூர் கோவிலுக்கு நில தானங்கள் அளித்துள்ளார். அப்போது தன்னுடைய ஆட்சி நிலப்பரப்பு பற்றி குறிப்புகளை சாசனங்களாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் வாணாதிராயர் தன்னுடைய எல்லைப்பகுதிகளாக
* திடியன் நாடு,
* புத்தூர் மலை,
* வைரவன் பற்று (தும்மக்குண்டு),
* வாரந்தூர்,
* கருமாத்தூர்
* புளியஞ்சோலை
போன்ற ஊர்களை தன்னுடைய எல்லைப்பகுதிகளாக வாணாதிராயர்கள் குறித்துள்ளனர்.

இவை இன்றைய பிரமலைக்கள்ளர்களின் 8 நாட்டை சேர்ந்த எல்லைப்பகுதி என்பதை தெளிவாக அறிய முடிகிறது.

கிபி 1488ல் மஹாபலி வாணாதிராயர் ஆட்சியில் சித்தர்மலை மகாலிங்கம் கோவிலில் வெளியிடப்பட்ட கல்வெட்டிலும் "புரமலை கல்லகனாடு" என்று தெளிவாகவே குறிக்கப்பட்டுள்ளது.

பிரமலைக்கள்ளர்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்ட வருவதற்காக வாணாதிராயர்கள் தங்கள் ஆதிக்கத்தை மதுரை கள்ளர் நாடுகளின் மீது செலித்தினார்கள்.

16ம் நூற்றாண்டுகளில் வாணாதிராயர் ஆட்சி முடிவுற்று நாயக்கர் ஆட்சி முறை மதுரையில் ஏற்பட்டது. கிபி 1623 ல் ஆட்சிக்கு வந்த திருமலை நாயக்கர் காலத்து செப்பேடும் பிறமலைக்கள்ளரின் எட்டு நாடு பற்றியும் அதனுடைய ஊர்களை பற்றியும் தெளிவாக கூறுகிறது.

ஆங்கிலேயர் காலத்திலும் இந்த கள்ளர் நாடுகள் மிகவும் சிறப்புடன் செயல்பட்டு வந்துள்ளதை, ஆங்கிலேயர் ஆவணங்களின் மூலம் அறிய முடிகிறது.

இப்படி பாண்டியர், சோழர்கள் காலம் தொட்டு வாணாதிராயர் , நாயக்கர் காலம் வரை தென்கல்லக நாடு , புரமலை கல்லகனாடு என்று அழைக்கப்பட்ட பிறமலைக்கள்ளர்களின் நாட்டு அமைப்பு 1000 வருடங்களுக்கு மேல் பழமையான பாரம்பரியத்துடன் இருந்து வருகிறது.
-----------------------------------------------------------------------
Reference book : தென்கல்லக நாடு, தென்னிந்திய கோவில் சாசனம்

என் இனிய தமிழ் மக்களே...!எங்களிடம் இருந்து விடைபெற்றாய் ஆனால்என்றும் உங்கள் கலை எங்களோடு பயணிக்கும் காலம் கடந்தும் ....💐
11/06/2026

என் இனிய தமிழ் மக்களே...!

எங்களிடம் இருந்து விடைபெற்றாய் ஆனால்
என்றும் உங்கள் கலை எங்களோடு பயணிக்கும் காலம் கடந்தும் ....💐

பாரதிராஜா உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை  |   |   |
11/06/2026

பாரதிராஜா உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை

| | |

பிரமலை கள்ளர் முறைப்படி இறுதி சடங்கு:-1. பிரமலை கள்ளர் இறந்தால் மகன் தான் மொட்டை எடுத்து கொள்ளி போடுவான். குடம் உடைக்க ப...
11/06/2026

பிரமலை கள்ளர் முறைப்படி இறுதி சடங்கு:-

1. பிரமலை கள்ளர் இறந்தால் மகன் தான் மொட்டை எடுத்து கொள்ளி போடுவான். குடம் உடைக்க போகும் போது அவனுக்கு தாய்மாமன் துணை செல்வார்.

2. பாரதிராஜா அவர்களுக்கு மகன் இறந்து விட்ட காரணத்தால் மகள் கொள்ளி போடுகிறார். அவரது தாய்மாமன் இயக்குனர் மனோஜ் குமார் உடன் செல்கிறார்.

3. பாரதிராஜா அவர்கள் ஆன்மா கருமாத்தூர் மூனுசாமி மடியில் சாந்தி அடையட்டும்....!🙏

11/06/2026

அன்னிய ஆட்சிக்கும் அடக்குமுறைக்கும் இறுதி வரை போரிட்டு மாண்ட இனம் எம் தேவரினம்...!

#கள்ளர் #தேவர் #தன்னரசுநாடு

Address

Usilampatti

Website

Alerts

Be the first to know and let us send you an email when கள்ளர் போர்ப்படை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category