Office of the Deputy Provincial Director of Agriculture Kilinochchi

Directions

Office of the Deputy Provincial Director of Agriculture Kilinochchi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Office of the Deputy Provincial Director of Agriculture Kilinochchi, Science Museum, A-9 Road, Kilinochchi.

15/08/2026

"யாய" முன்மாதிரி கண்டச் செய்கை வயல் விழா #உருத்திரபுரம்

 #வயல்  #விழா - #உருத்திரபுரம் - 14.08.2026++++++++++++++++++++++++++++++++++++++++நெல் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக...
14/08/2026

#வயல் #விழா - #உருத்திரபுரம் - 14.08.2026
++++++++++++++++++++++++++++++++++++++++
நெல் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்குடனான
"யாய” முன்மாதிரி கண்ட நெற்செய்கை

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியம் 2026 இன் நிதிப் பங்களிப்புடன் பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகம், கிளிநொச்சியின் உருத்திரபுரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவிற்கு உட்பட்ட உருத்திரபுரம் குளம் சிறிய நீர்ப்பாசன குளத்தின் கீழான மாதாபுரி (சுவாமி கமம்) சிவன் வீதி உருத்திரபுரம் முகவரியில் உள்ள வயற் துண்டத்தில் நெற்செய்கையில் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்குடன் ஸ்தாபிக்கப்பட்ட 50 ஏக்கர் விஸ்தீரணம் உள்ள "யாய" கண்ட முன்மாதிரித்துண்ட வயல் விழா 14.08.2026 அன்று காலை 10.00 மணியளவில் பிரதேச விவசாயப் போதனாசிரியர் திரு.நா.மகராஜன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.ஸ்ரீ.ராஜேஸ்கண்ணா, மேலதிக பணிப்பாளர், பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அயிவிருத்தி நிலையம், கிளிநொச்சி அவர்களும் சிறப்புட விருந்தினர்களாக திரு.இ.சஞ்சீவன், பிரதி விவசாயப் பணிப்பாளர், விதைகள் மற்றும் நடுகைப்பொருள் அபிவிருத்தி நிலையம், கிளிநொச்சி, திருமதி.நி.பமித்திரா, பிரதி விவசாயப் பணிப்பாளர் (ஆராய்ச்சி), நெல் ஆராய்ச்சி நிலையம், கிளிநொச்சி அவர்களுடன் திருமதி.சோ.விஜயதாசன் பிரதி விவசாயப் பணிப்பாளர் (விரிவாக்கம்) கிளிநொச்சி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

குறித்த வயற்துண்டத்தில் சிறப்பு பயிராக்கவியல் செயற்பாடுகளை மேற்கொண்டு At-307 இன நெல் வர்க்கமானது பயிரிடப்பட்டது. இவ் கண்டத்தில் சராசரியாக 4.3mt/ha எனும் விளைவை பெற்று வந்த நிலையில் வேறுபட்ட அதிகரித்த இரசாயன பசளை சிபாரிசிற்கு அமைவாக அவ் வயற்துண்டத்தில் இருந்து 3 வருடத்தில் 6mt/ha எனும் விளைவை நோக்கியே இவ் "யாய" முன்மாதிரி கண்ட நெற்செய்கையானது ஸ்தாயிக்கப்பட்டது.

உற்பத்திதிறனை அதிகரிக்கும் "யாய" நெற்செய்கை தொடர்பான விளக்கத்தினை திருமதி.ரூ.ஸ்ரீரூபி பாட விடய உத்தியோகத்தர் (நெல்) அவர்களும், பயிர்க் காப்புறுதி மற்றும் விவசாயிகள் ஓய்வூதியம் தொடர்பான தெளிவூட்டலை திரு.ப.பிரதீப், வெளிக்கள உத்தியேதகத்தர், கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை, கிளிநொச்சி அவர்களும் தொடர்ந்து "El-Nino” வினால் சவாலாகும் விவசாயமும் உணவு உற்பத்தியும் எனும் தொனிப்பொருளிலான சிறப்பு கருத்து பகிர்வினை பிரதம விருந்தினர் அவர்களும் வழங்கி நிகழ்வினை சிறப்பித்தனர்.

மேலும் நெல்லின் உற்பத்திதிறனை அதிகரிக்கும் நோக்குடன் நவீன முறையில் நெற் செய்கையில் ஈடுபட்ட தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளை ஊக்குவிக்குமுகமாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியம் 2026 இன் ஊடாக காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் இவ் வயல் விழாவில் உதவி விவசாயப் பணிப்பாளர் நெல் ஆராய்ச்சி நிலையம் பரந்தன், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் உருத்திரபுரம், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் உருத்திரபுரம் வடக்கு. பாட விடய உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், தொழில் நுட்ப உதவியாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் பொது மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

10/08/2026
14/07/2026
கிளிநொச்சி மாவட்டத்தில் கனகாம்பிகைக்குள விவசாயப்போதனாசிரியர் பிரிவில் விவசாய போதனாசிரியர் திருமதி.பி.ஷிவனியாவின் தலைமையி...
10/07/2026

கிளிநொச்சி மாவட்டத்தில் கனகாம்பிகைக்குள விவசாயப்போதனாசிரியர் பிரிவில் விவசாய போதனாசிரியர் திருமதி.பி.ஷிவனியாவின் தலைமையில் உ.தர்ஷினி என்பவரின் களத்தில் PSDG - 2025 இன் ஊடாக டித்வா அழிவின் பின்னரான மீள் மரக்கறிப்பயிர்ச்செய்கைகான கத்தரி, தக்காளி பயிர்களுக்
கான வயல் விழாவானது 09.06.2026 மதியம் 2:30 மணியளவில் நடைபெற்றது.
இதில் பிரதி விவசாயப் பணிப்பாளர், பாடவிதான உத்தியோகத்தர்கள், கமக்கார அமைப்பின் தலைவர், செயலாளர்,அதிகளவான விவசாய பெருமக்களும் கலந்து கொண்டார்கள்
விவசாய போதனாசிரியர் இத்திட்டத்தின் நோக்கங்களையும் வழங்கப்பட்ட மரக்கறிப்பயிர்கள் தொடர்பான விவரங்களையும் விவசாயிகளுக்கு விளக்கினார். அதனைத் தொடர்ந்து பழப்பயிருக்குரிய பாட விதான உத்தியோகத்தரால் கத்தரி மற்றும் தக்காளியின் பயிர்ச்செய்கை தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பயிர் பாதுகாப்பிற்குரிய பாடவிதான உத்தியோகத்தரரினால் கத்தியில் பக்றீயா வாடல் , வெண்ஈகளின் தாக்கம், கத்தரியில் நெமற்றோட்டுகளின் தாக்கம் தொடர்பான மாதிரிகளை காண்பித்து அதற்குரிய கட்டுபாட்டு முறைகள் தொடர்பாகவும் விளக்கமளித்தார்
அதனை தொடர்ந்து கத்தரியில் பக்றீயா. வாடலை கட்டுபடுத்துவதற்கான சுண்டங் கத்தரியில் கத்தரியை ஒட்டு தொழில்நுட்பம் செய்முறை ரீதியான விளக்கங்களுடன் செய்து காட்டப்பட்டது
அதனைத் தொடர்ந்து பிரதி விவசாய பணிப்பாளர் விவசாய திணைக்களத்தினால் வழங்கப்பட்ட திட்டங்கள், மற்றும் அவற்றினால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் தொடர்பாகவும் சந்தைப்படுத்தல் வசதிகள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியம் 2026 நிதியத்தினால் வயல் நிலங்களில் பயிர் மாற்றீட்டு திட்டத்தில் பயிரிடப்பட...
02/07/2026

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியம் 2026 நிதியத்தினால் வயல் நிலங்களில் பயிர் மாற்றீட்டு திட்டத்தில் பயிரிடப்பட்ட பயறு செய்கைக்கான அறுவடைவிழா ஆனது பாரதிபுரம் விவசாய போதனாசிரியர் பிரிவில் 26.06.2026 அன்று நடைபெற்றது.

அ. அனோஜா(தொழிநுட் ப உதவியாளர் -பாரதிபுரம் )அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சோ.விஜயதாசன்(பிரதி விவசாய பணிப்பாளர்-கிளிநொச்சி)அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.மேலும் மறுவயற்பயிர் பாடவிதான உத்தியோகத்தர் திரு.க.பிரதீபன்,விவசாய போதனாசிரியர்கள்,விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வயற் காணியில் விதைப்பரிகரணம், வரிசை விதைப்பு ( விதையிடு கருவி) போன்ற தொழில்நுட்பங்களுடன் சிறந்த முறையில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும்.

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியம் 2026 ன் நிதியீட்டத்தின் பயறு செய்கையில் உற்பத்தி திறனை அதிகரிக்கும் அறுவடை...
02/07/2026

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியம் 2026 ன் நிதியீட்டத்தின் பயறு செய்கையில் உற்பத்தி திறனை அதிகரிக்கும் அறுவடைவிழா ஆனது அம்பாள்குளம் விவசாய போதனாசிரியர் பிரிவில் 01.07.2026 அன்று நடைபெற்றது.

நி.மதுபாஜினி (விவசாய போதனாசிரியர்- அம்பாள்குளம்)அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சோ.விஜயதாசன்(பிரதி விவசாய பணிப்பாளர்-கிளிநொச்சி)அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.மேலும் மறுவயற்பயிர் பாடவிதான உத்தியோகத்தர் திரு.க.பிரதீபன்,விவசாய போதனாசிரியர்கள்,விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வரிசை விதைப்பு,விதைப்பரிகரணம், சூரிய நீர்ப்பம்பியுடனான தூவல் நீர்ப்பாசனம் போன்ற தொழில்நுட்பங்களுடன் சிறந்த முறையில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும்.

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியம் 2026 ன் நிதியீட்டத்தின் கீழ் டித்வா அழிவின் பின்னரான மீள் பயிர்ச்செய்கை தி...
01/07/2026

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியம் 2026 ன் நிதியீட்டத்தின் கீழ் டித்வா அழிவின் பின்னரான மீள் பயிர்ச்செய்கை திட்டத்தில் பயிரிடப்பட்ட மரக்கறிப் பயிர்ச்செய்கையின் வயல் விழா ஆனது கிருஸ்ணபுரம் விவசாய போதனாசிரியர் பிரிவில் 09.06.2026 அன்று நடைபெற்றது.

செ.செல்வநொஜிலின் (விவசாயப்போதனாசிரியர்_கிருஸ்ணபுரம்)
அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவில் சோ.விஜயதாசன்(பிரதி விவசாய பணிப்பாளர்-கிளிநொச்சி)அவர்கள் பிரதம விருந்தினராக பங்கேற்றிருந்தார்.பாடவிதான உத்தியோகத்தர்கள்,விவசாய போதனாசிரியர்கள்,விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியம் 2026 ன் நிதியீட்டத்தின் வயல் நிலங்களில் பயிர் மாற்றீட்டுத் திட்டத்தில் பயி...
31/05/2026

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியம் 2026 ன் நிதியீட்டத்தின் வயல் நிலங்களில் பயிர் மாற்றீட்டுத் திட்டத்தில் பயிரிடப்பட்ட பயிர்களின் அறுவடைவிழா ஆனது கனகாம்பிகைக்குளம் விவசாய போதனாசிரியர் பிரிவில் 29.05.2026 அன்று நடைபெற்றது.

பி.சிவனியா (விவசாய போதனாசிரியர்- கனகாம்பிகைக்குளம்)அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சோ.விஜயதாசன்(பிரதி விவசாய பணிப்பாளர்-கிளிநொச்சி)அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.மேலும் பாடவிதான உத்தியோகத்தர்கள்,விவசாயிகள்,என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Address

A-9 Road
Kilinochchi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Office of the Deputy Provincial Director of Agriculture Kilinochchi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category